Saturday, October 8, 2011

அகரமுதல் அனுபவம்

ன்றாடம் பரிமாறும் பச்சரிசிச் சுடுசோறும்
வியில் அவித்தெடுத்த இலவம்பஞ் சிட்டிலியும்
ஞ்சி மிளகு தட்டிப்போட்ட இளஞ்சூட்டுப் பொங்கலும்
ஓட்டி இலையிட்ட இனிப்புக் கொழுக்கட்டையும்
ண்ண உண்ண சலிக்காத உப்புமா வகையறாக்களும்
றுகாய்கள் அணிவகுப்பில் உப்பிட்ட தயிர்சோறும்
ண்ணி எண்ணிப் பார்க்கையிலே என் அருமை நெஞ்சமே
க்கமே எஞ்சிடுதே சுவைக்கிங்கே பஞ்சமே!
ந்தின்பால் இரண்டேற்றி அத்திப்போல் பூத்த அந்த
ரு வார விடுமுறை உயிர்ப்பித்த தென்நாவை!
ய்வெடுத்து ஓய்ந்துபோய் சிந்தித்த வேளையில்
வை அன்று பாடிச்சென்ற பசிப்பிணிப் பாடல்
து அழகாக விளக்கிற்றே சாண்வயிரின் நாடல்!