அன்றாடம் பரிமாறும் பச்சரிசிச் சுடுசோறும்
ஆவியில் அவித்தெடுத்த இலவம்பஞ் சிட்டிலியும்
இஞ்சி மிளகு தட்டிப்போட்ட இளஞ்சூட்டுப் பொங்கலும்
ஈ ஓட்டி இலையிட்ட இனிப்புக் கொழுக்கட்டையும்
உண்ண உண்ண சலிக்காத உப்புமா வகையறாக்களும்
ஊறுகாய்கள் அணிவகுப்பில் உப்பிட்ட தயிர்சோறும்
எண்ணி எண்ணிப் பார்க்கையிலே என் அருமை நெஞ்சமே
ஏக்கமே எஞ்சிடுதே சுவைக்கிங்கே பஞ்சமே!
ஐந்தின்பால் இரண்டேற்றி அத்திப்போல் பூத்த அந்த
ஒரு வார விடுமுறை உயிர்ப்பித்த தென்நாவை!
ஓய்வெடுத்து ஓய்ந்துபோய் சிந்தித்த வேளையில்
ஔவை அன்று பாடிச்சென்ற பசிப்பிணிப் பாடல்
அஃது அழகாக விளக்கிற்றே சாண்வயிரின் நாடல்!

Kalkals
ReplyDeleteEnakkum sethu yosichiyo?!Pinra.Ennoda nelamayum ithaan :)
ReplyDelete